/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சித்த மருத்துவம் குறித்து ஆலோசனை முகாம்
/
சித்த மருத்துவம் குறித்து ஆலோசனை முகாம்
ADDED : ஜூலை 11, 2025 11:29 PM
நெகமம், ;நெகமம், சமரச சுத்த சன்மார்க்க சத்திய தரும சாலையில், சித்த மருத்துவ ஆலோசனை முகாம் நேற்று நடந்தது.
நெகமம், நாகர் மைதானம், சமரச சுத்த சன்மார்க்க சத்திய தரும சாலையில், மகாலிங்கம் மாரியம்மாள் மணிவிழா அறக்கட்டளை மற்றும் கஸ்தூரிபா காந்தி நினைவு சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்தும், சித்த மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது.
இதில், புற்றுநோய், இருதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான அறிகுறிகள், உணவு முறைகள் குறித்து ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட்டது. முகாமில் பங்கேற்ற மக்களுக்கு, கலிக்கம், நசியம், செவியம் உள்ளிட்ட மருந்துகள் இலவசமாக அளிக்கப்பட்டது. இதில், 300 நபர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.