/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போராட்டத்தில் பங்கேற்க ஆலோசனை கூட்டம்
/
போராட்டத்தில் பங்கேற்க ஆலோசனை கூட்டம்
ADDED : டிச 29, 2025 05:30 AM
பொள்ளாச்சி: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அனைத்து நிலை பணியாளர் ஒன்றியத்தின் ஆலோசனை கூட்டம், பொள்ளாச்சியில் நடந்தது. மாநில தலைவர் ஜோதிமுருகன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் நிர்மல்குமார் வரவேற்றார்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் முரளி பேசினார். மாநில பொருளாளர் தமிழ்செல்வன் நன்றி கூறினார்.
கூட்டத்தில், தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொது சங்கமான தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தோடு இணைப்பு சங்கமாக இணைந்து, சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்று (29ம் தேதி) அறிவிக்கப்பட்டுள்ள மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும், ஜன. 6ம் தேதி முதல் நடக்கும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் நெடுஞ்சாலைத்துறை அனைத்து நிலை பணியாளர் ஒன்றியம் முழுமையாக பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

