நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை; வால்பாறை ஹிந்து அன்னையர் முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது.
கூட்டத்திற்கு நகர தலைவர் ஸ்ரீதேவி, நகர பொதுசெயலாளர் சிவபாக்கியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வால்பாறையில் வரும் 20ம் தேதி, ஆடி மாதம் அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிேஷக விழா சிறப்பாக நடத்துவது என்றும், இதையொட்டி, காலை, 9:30 மணிக்கு நடுமலை ஆற்றிலிருந்து நகரில் முக்கிய வீதி வழியாக சென்று, வாழைத்தோட்டம் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜை நடத்துவது,
ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில் நடைபெறும் முதலாமாண்டு விழாவில், பக்தர்கள் திரளாக கலந்து கொள்ள செய்வது என முடிவு செய்யப்பட்டது.
இதில், ஹிந்து அன்னையர் முன்னணி வால்பாறை நகர செயலாளர்கள் ஜெயந்தி, செல்வி, முத்துலட்சுமி, அம்பிகா உட்பட பலர் பங்கேற்றனர்.