/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டுச்சாவடிகள் மறு சீரமைப்பு கட்சியினருடன் ஆலோசனை
/
ஓட்டுச்சாவடிகள் மறு சீரமைப்பு கட்சியினருடன் ஆலோசனை
ஓட்டுச்சாவடிகள் மறு சீரமைப்பு கட்சியினருடன் ஆலோசனை
ஓட்டுச்சாவடிகள் மறு சீரமைப்பு கட்சியினருடன் ஆலோசனை
ADDED : ஆக 22, 2025 11:26 PM

சூலுார்: சூலுார் சட்டசபை தொகுதியில் ஓட்டு சாவடிகளை மறு சீரமைப்பது தொடர்பாக, அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கடந்த ஜன., மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் படி, சூலுார் தொகுதியில், 1 லட்சத்து, 62 ஆயிரத்து, 86 ஆண்கள், 1 லட்சத்து, 72 ஆயிரத்து, 126 பெண்கள், 99 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம் 3 லட்சத்து 34 ஆயிரத்து, 311 வாக்காளர் உள்ளனர். கடந்த தேர்தலில், 129 இடங்களில், 333 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டன. வாக்காளர்கள் அதிகரித்துள்ளதால் இது மேலும் அதிகரிக்ககூடும்.
இந்நிலையில், ஓட்டு சாவடிகள் மறு சீரமைப்பது குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம், சூலுார் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தி.மு.க. அ.தி.மு.க. பா.ஜ. காங், கம்யூ, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் ஷாஜகான் பேசுகையில், ''ஆயிரத்து 200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள, ஓட்டு சாவடிகள் கண்டறியப்பட்டு, அவற்றை மறு சீரமைக்கப்பட உள்ளது. இதன்மூலம், ஓட்டு சாவடிகளின் எண்ணிக்கை உயரும்,'' என்றார்.
கட்சியினர் பேசுகையில், ''வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை நீக்க வேண்டும். இரு இடங்களில் ஓட்டு உள்ளவர்களை நீக்க வேண்டும்,'' என்றனர்.