ADDED : ஏப் 15, 2026 04:47 AM

அ நிறம் | அளவு
கோவை: ஜே.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் 12வது பட்டமளிப்பு விழா நடந்தது. அண்ணா பல்கலை மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை பேராசிரியர் பட்நாயக் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
அவர் பேசுகையில், ''புதிய பாதைகள், வாய்ப்புகளால் உலகம் நிரம்பியுள்ளது. தொடர்ந்து கற்றல் மறறும் பல்துறை அறிவை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இது எந்த துறை யிலும் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும், '' என்றார்.
விழாவில் 170 இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. ஜே.சி.டி., கல்வி நிறுவனங்களின் செயலாளர் துர்கா, கல்லுாரி முதல்வர் மனோகரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
