/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தொடர்ச்சியான கற்றலே வெற்றியாளராக உயர்த்தும்'
/
'தொடர்ச்சியான கற்றலே வெற்றியாளராக உயர்த்தும்'
ADDED : ஏப் 23, 2025 06:43 AM

கோவை; ஈஷா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், 12 மற்றும், 13வது பட்டமளிப்பு விழா நடந்தது.
சிறப்பு விருந்தினராக, சென்னை கே ஆய்வகங்களின் மென்பொருள் மேம்பாட்டுக்கான தலைமை மக்கள் அதிகாரி ஆனந்த் தியாகராஜன் கலந்துகொண்டார். அவர், ''பட்டங்கள் வாங்கியதால் இத்துடன் மாணவர்கள் கற்றலை நிறுத்தக்கூடாது. தொடர்ச்சியான கற்றலே வாழ்க்கையிலும் உங்களை வெற்றியாளராக மாற்றும், உயர்ந்த இடத்திற்கு முன்னேற்றும்,'' என்றார்.
கல்லுாரி தலைவர் சுஜாதா, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் செயலாளர் அஜித், தாளாளர் ஆதர்ஷ் ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தனர்.
கல்லுாரி முதல்வர் ராபர்ட் கென்னடி, துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் பங்கேற்றனர்.

