/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காலை, இரவில் தொடர் மின்வெட்டு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
/
காலை, இரவில் தொடர் மின்வெட்டு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
காலை, இரவில் தொடர் மின்வெட்டு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
காலை, இரவில் தொடர் மின்வெட்டு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : நவ 12, 2025 11:27 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம் பகுதியில் ஏற்படும் மின்வெட்டால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு, சிக்கலாம் பாளையம் பி.வி.எம்., நகர் மற்றும் சுற்று பகுதிகளில் தினமும், காலை மற்றும் இரவு நேரங்களில், குறைந்தது இரண்டு மணி நேரம் மின்வெட்டு ஏற் படுகிறது.
இது குறித்து, அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும், தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இதே போன்று, தெருவிளக்கு ஒருபுறம் எரிந்தாலும், மறுபுறம் எரிவதில்லை. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கூறியதாவது:
தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏற்படுவதால், வேலைக்கு செல்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். வீடுகளில் சமையல் பணிகள் பாதிக்கிறது. இரவில், பள்ளி குழந்தைகள் படிக்க முடியாமலும், வயதானவர்கள் தூக்கமின்றியும் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இது மட்டுமின்றி, இரவு நேரத்தில் வெளியில் செல்லும்போது பாம்புகள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தொல்லையால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு பிரச்னையை சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

