/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீடித்த நிலையான வாழ்வியல் பயிற்சி
/
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீடித்த நிலையான வாழ்வியல் பயிற்சி
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீடித்த நிலையான வாழ்வியல் பயிற்சி
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீடித்த நிலையான வாழ்வியல் பயிற்சி
ADDED : நவ 17, 2024 10:23 PM
கோவை; மத்திய வனத்துறை அமைச்சகம், பொள்ளாச்சி சேவாலயம் அறக்கட்டளை சார்பில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 2 நாள் பயிலரங்கு நடந்தது.
சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக, அட்டகட்டி மேம்பட்ட வனவிலங்கு பயிற்சி மையம், கோவை வேளாண் பல்கலை வளாகத்தில் பயிலரங்குகள் நடந்தன.
மூங்கில் கைவினைப் பொருட்கள், விபூதி தயாரிப்பு, மண்புழு உரம், மியாவாகி காடுகளை உருவாக்குவது, மழை நீர் சேகரிப்பு, சூரியசக்தி பயன்பாடு, உயிரி எரிவாயு போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன.
மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விதைநேர்த்தி, பூச்சிகளின் பயன்பாடு, பல்லுயிர்ப் பெருக்கம், தேனீ வளர்ப்பு, இயற்கை உரம் தயாரித்தல் உள்ளிட்டவை குறித்தும் மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களை, பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி பாராட்டினார்.
வனச்சரகர் ரவி, வனப்பயிற்சி பயிற்றுநர்கள் மனோஜ்குமார், லிஜோ, சேவாலயம் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.