/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூன்றாண்டுகளுக்குள் அனைத்து தெருநாய்களுக்கும் கருத்தடை சிகிச்சை
/
மூன்றாண்டுகளுக்குள் அனைத்து தெருநாய்களுக்கும் கருத்தடை சிகிச்சை
மூன்றாண்டுகளுக்குள் அனைத்து தெருநாய்களுக்கும் கருத்தடை சிகிச்சை
மூன்றாண்டுகளுக்குள் அனைத்து தெருநாய்களுக்கும் கருத்தடை சிகிச்சை
ADDED : பிப் 18, 2025 11:31 PM

கோவை; கோவை மாநகர பகுதியில், 1.11 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. மூன்று தனியார் தொண்டு நிறுவனம் மூலம் பிடிக்கப்பட்டு, இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
கிழக்கு, மேற்கு, தெற்கு, மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், தலா ஒன்று வீதம் நான்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில், புதிதாக ஒரு மையம் கட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 2023-24ல், 7,603, நடப்பு 2024-25 நிதியாண்டில், 9,689 தெருநாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.
குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோர் மற்றும் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்வோர், இடையூறுகளை சந்திப்பதால், நாளொன்றுக்கு ஒவ்வொரு மையமும் தலா, 50 வீதம், மாதத்துக்கு, 1,500 தெருநாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளலுாரில் உள்ள மையம், விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது; அச்சமயம் கூடுதலான தெருநாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியும். இதன் மூலம் அடுத்து வரும் மூன்றாண்டுகளுக்குள், அனைத்து தெருநாய்களுக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, இனப்பெருக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உறுதியளித்துள்ளார்.

