தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உரிய நேரத்தில் வேண்டும் சம்பளம்: ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்

உரிய நேரத்தில் வேண்டும் சம்பளம்: ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்

உரிய நேரத்தில் வேண்டும் சம்பளம்: ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்


UPDATED : ஜூலை 09, 2026 06:02 PM

ADDED : ஜூலை 09, 2026 06:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2026 06:02 PM ADDED : ஜூலை 09, 2026 06:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்கள், குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்காததை கண்டித்து, மருத்துவமனை முன் போராட்டம் நடத்தினர்.

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், 52 ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் பணிபுரிகின்றனர். மும்பையை சேர்ந்த 'கிறிஸ்டல்' நிறுவனம், மூன்று மாவட்டங்களில், 16 இடங்களில் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. அதில், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையும் ஒன்று. பணியாளர்களுக்கு, குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்காமல், மாதத்தில் ஏதாவது ஒரு நாள் சம்பளம் வழங்குகின்றனர். பணியாளர்கள், பலமுறை மேலாளரிடம் புகார் கூறியும் நடவடிக்கை இல்லாததால், நேற்று, அரசு மருத்துவமனை முன் போராட்டம் நடத்தினர்.

மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், தனியார் நிறுவன மேலாளர் ஆகியோர், பணியாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குறிப்பிட்டு தேதியில் சம்பளம் வழங்கப்படும் என்ற உத்தரவாதம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. முடிவில், மாதத்தில், 7ம் தேதியில் இருந்து 10ம் தேதிக்குள் அவரவர் வங்கி கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும் என, நிறுவன மேலாளர் உறுதியளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us