ADDED : ஜூலை 09, 2026 05:50 PM
சூலுார்: சுல்தான்பேட்டை வட்டாரத்தில், 160 எக்டேரில், சொட்டுநீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலைத் துறை சார்பில், சொட்டு நீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு மானியம், தென்னை, காய்கறிகள், பழப் பயிர்கள் உட்பட அனைத்து பயிர்களுக்கும் சொட்டு நீர் பாசனம் அமைக்க தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
உதவி இயக்குனர் ஷாலினி உதயா கூறுகையில், ‘‘வட்டாரத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க, 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில், 160 எக்டேரில் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள், சிறு, குறு விவசாயி சான்று, சிட்டா, அடங்கல், ஆதார் மற்றும் ரேஷன் கார்டு நகல், இரு புகைப்படங்களுடன் தோட்டக்கலை அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்,’’ என்றார்.
