/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒப்பந்த நிறுவனம் கெடுபிடி துாய்மை பணியாளர் குமுறல்
/
ஒப்பந்த நிறுவனம் கெடுபிடி துாய்மை பணியாளர் குமுறல்
ஒப்பந்த நிறுவனம் கெடுபிடி துாய்மை பணியாளர் குமுறல்
ஒப்பந்த நிறுவனம் கெடுபிடி துாய்மை பணியாளர் குமுறல்
ADDED : ஆக 10, 2025 02:31 AM
கோவை : ஆறு நாட்கள் தொடர்ந்து பணிக்கு சென்றால்தான் வார விடுமுறை போன்ற கெடுபிடிகளால் சிரமங்களை சந்திப்பதாக ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் குமுறுகின்றனர்.
கோவை மாநகராட்சியில், 4,650 ஒப்பந்த பணியாளர்களும், 910 கொசு ஒழிப்பு பணியாளர்களும் உள்ளனர். தவிர, 1,900க்கு மேற்பட்ட நிரந்தர பணியாளர்களும் பணிபுரிகின்றனர். இரு ஆண்டுகளுக்கு முன்பு குப்பை அள்ளும் பணி, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனால், பணி நிரந்தரம் எதிர்பார்ப்பில் இருந்த ஒப்பந்த பணியாளர்கள் ஏமாற்றம் அடைந்ததுடன், எதிர்ப்பும் தெரிவித்தனர். சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர். வேலை துவங்கும் நேரம் காலை 7 மணியில் இருந்து 6 மணியாக மாற்றப்பட்டதால், சிரமங்களை சந்திப்பதாக சொல்கின்றனர்.
தற்போது, வாரம் ஆறு நாட்கள் தொடர்ந்து பணிக்கு வந்தால்தான் ஒரு நாள் வார விடுமுறை என்பதுடன், இடைப்பட்ட நாளில் விடுமுறை எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதுடன், வார விடுமுறை நாளிலும், வேலைக்கு வர ஒப்பந்த நிறுவனம் கெடுபிடி செய்வதாக கூறினர்.
பாரதிய பொது தொழிலாளர் சங்க துாய்மை பணியாளர் பிரிவு செயலாளர் ஸ்டாலின் பிரபு கூறும்போது, “ஒரு நாள் விடுப்பு எடுத்தால், இரு நாள் சம்பளம் கிடைக்காது. காய்ச்சல் போன்ற உடல்நலக்குறைவான சமயத்தில் எப்படி பணிக்கு வரமுடியும். துாய்மை பணியாளர் மீதான அடக்கு முறை தொடர்ந்தால் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்துவோம்,” என்றார்.