தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஒன்றிய அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை

ஒன்றிய அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை

ஒன்றிய அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை


UPDATED : அக் 20, 2026 07:16 PM

ADDED : அக் 20, 2026 07:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2026 07:16 PM ADDED : அக் 20, 2026 07:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலூர்:

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, உள்ளாட்சி நிர்வாகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் துவக்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யும், என, வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, கலெக்டர் உத்தரவின் பேரில், கோவை மாவட்டத்தில், ஊராட்சி ஒன்றியங்களில் தொலைபேசி எண்ணுடன் கூடிய கட்டுப்பாட்டு அறைகள் துவக்கப்பட்டுள்ளன.

சூலூர் ஒன்றிய அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஒன்றியத்தில் உள்ள, 18 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள், 0422 - 2587238 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, மழை தொடர்பான பாதிப்புகள், உதவிகள் குறித்து தெரிவிக்கலாம். இந்த கட்டுப்பாட்டு அறையில் பணியாற்ற சுழற்சி முறையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், 24 மணி நேரமும் பணியில் இருப்பர். தொலைபேசியில் பொதுமக்கள் தரும் விபரங்களை, சம்மந்தப்பட்ட ஊராட்சி செயலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உடனடியாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஊராட்சி செயலர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அந்த ஊராட்சிகளில் பருவமழை பாதிப்புகளை, உடனுக்குடன் நிவர்த்தி செய்ய, தயார் நிலையில் இருக்க வேண்டும், என, அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us