sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பருவமழையை எதிர்கொள்ள கட்டுப்பாட்டு அறை துவக்கம்

/

பருவமழையை எதிர்கொள்ள கட்டுப்பாட்டு அறை துவக்கம்

பருவமழையை எதிர்கொள்ள கட்டுப்பாட்டு அறை துவக்கம்

பருவமழையை எதிர்கொள்ள கட்டுப்பாட்டு அறை துவக்கம்


ADDED : அக் 14, 2024 08:23 PM

Google News

ADDED : அக் 14, 2024 08:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள கட்டுப்பாட்டு அறை மற்றும் குழு அமைத்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள தயாராக உள்ளதாக கமிஷனர் தெரிவித்தார்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்கிறது. மழையால், ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த, அரசுத்துறைகள் வாயிலாக முன்னெடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதில், பொள்ளாச்சி நகராட்சியில், கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது.

நகராட்சி கமிஷனர் கணேசன் கூறியதாவது:

பொள்ளாச்சி நகராட்சியில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை கட்டுப்படுத்த, நிவாரண உதவி மையம், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.இந்த கட்டுப்பாட்டு அறை, 24 மணி நேரமும் செயல்படும் வகையில், காலை, 8:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை ஒருவரும், இரவு, 8:00 மணி முதல், காலை, 8:00 மணி வரை ஒருவர் என இரு ஷிப்ட்களில் கண்காணிக்கப்படும்.

மேலும், பருவமழையை எதிர்கொள்ள, நான்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் ஆறு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள், 04259 220999 என்ற சிறப்பு தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு மழை பாதிப்பு தகவல் தெரிவிக்கலாம். பாதாள சாக்கடை சம்பந்தமாக, 94450 75903, தெருவிளககு சம்பந்தமாக, 86675 73367, குடிநீர் குறித்து, 99659 67652 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பருவமழை சம்பந்தமாக வரும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us