/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டியலின அதிகாரி பயன்படுத்திய ஆபீசை சாணத்தால் சுத்தம் செய்ததால் சர்ச்சை தி.மு.க., தொழிற்சங்க நிர்வாகி 'சஸ்பெண்ட்'

ADDED : பிப் 01, 2026 06:35 AM

மேட்டுப்பாளையம்: அரசு போக்குவரத்து கழக பணிமனையில், மேலாளராக பணியாற்றிய பட்டியல் இனத்தை சேர்ந்தவர், பணியிட மாற்றலாகி சென்ற பின், அந்த அலுவலகத்தை, தி.மு.க., தொழிற்சங்க நிர்வாகி, சாணத்தால் சுத்தம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் கிளை, அரசு போக்குவரத்து கழக பணிமனையில், தி.மு.க., தொழிற்சங்க நிர்வாகி சசிராஜ், டிரைவராகவும், போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலராகவும் உள்ளார்.
இவர் மீது, சக ஊழியர்கள், கோவை மண்டல போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.
அதில், பட்டியல் இனத்தை சேர்ந்த பஸ் டிரைவர்கள் நீண்ட வழித்தடங்களிலும், பிற ஜாதியினர் குறுகிய வழித்தடங்களிலும் பணி அமர்த்தப்படுகின்றனர். விடுப்பு அனுமதி வழங்கவும், குறுகிய வழித்தடங்களில் பணியமர்த்தவும் ஊழியர்களிடமிருந்து பணம் கேட்கப்படுகிறது.
பட்டியல் இனத்தை சேர்ந்த பிரகாஷ்குமார், புதிய கிளை மேலாளராக பணியில் சேர்ந்தார். அவரை, தன் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு, தி.மு.க., தொழிற்சங்க நிர்வாகி சசிராஜ் வற்புறுத்தினார்.
அதை அவர் மறுத்ததுடன், ஜாதி ரீதியான பாகுபாடு காட்டியதற்காக, தொழிற்சங்க நிர்வாகி சசிராஜுக்கு, மேலாளர், 'மெமோ' வழங்கியுள்ளார்.
ஆத்தி ரமடைந்த சசிராஜ், தன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தியதையடுத்து, உக்கடம் கிளைக்கு, பிரகாஷ்குமார் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், சசிராஜ், ஒரு பணிப்பெண்ணை கொண்டு, மேலாளரின் அலுவலக தரையை, மாட்டு சாணத்தால் சுத்தம் செய்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புகாரை தொடர்ந்து, சசிராஜ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து, அவரிடம் கேட்டபோது, ''என் மீது வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளும் முற்றிலும் தவறானவை,'' என்றார்.
பட்டியல் இன அதிகாரி பணியாற்றிய இடத்தை, தி.மு.க., தொழிற்சங்க நிர்வாகி, சாணம் கொண்டு மெழுகி தரையை சுத்தம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.---