sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பு

/

 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பு

 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பு

 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பு


ADDED : பிப் 01, 2026 05:24 AM

Google News

ADDED : பிப் 01, 2026 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, மாதசம்பளம் வழங்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

மாநிலத்தில் 50 சதவீத அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, கடந்த டிசம்பர் சம்பளம் வங்கிக் கணக்கில் தாமதமாக வரவு வைக்கப்பட்டது.

வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 30 அல்லது 31-ம் தேதிகளில் சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆனால், நிர்வாகக் காரணங்களால் உரிய தேதியில் சம்பளம் கிடைப்பதில்லை என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

மாவட்டக் கல்வி அலுவலர் கூறுகையில், பள்ளிகளிலிருந்து சம்பள பில் சமர்ப்பிக்கப்பட்ட ஓரிரு நாட்களிலேயே அவற்றை சரிபார்த்து அனுமதி அளித்து விடுகிறோம். கடைசி நேரத்தில் சமர்ப்பிக்கப்படும் பில்களையும், முடிந்தவரை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்றார்.

ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு பணிகள் என்று காரணம்காட்டி, சம்பள பட்டியல்களில் கையெழுத்திட தாமதம் ஏற்படுகிறது. ஒவ்வொரு மாத இறுதியிலும் சம்பளம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்' என தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us