ADDED : பிப் 28, 2024 12:04 AM
மேட்டுப்பாளையம்;காரமடையில் தேர்த்திருவிழா நடந்தது. இதில் ராட்டினம் ஆடும் போது, நெல்லித்துறையை சேர்ந்த சுரேஷ்குமார், 24, லோகநாதன், 20, சத்யானந்தம், 24, அபினேஷ், 19, ரமேஷ், 23, உள்ளிட்டோருக்கும், சமயபுரத்தை சேர்ந்த திவாகர், 29, ஆனந்தகுமார், 21, 16 வயது சிறுவன், வெங்கடஷ், 24, உள்ளிட்டோருக்கும் தகராறு ஏற்பட்டது. அருகில் உள்ளவர்கள் சமாதானம் செய்தனர்.
இதனிடையே இவர்கள் அனைவரும் சமயபுரம் வன அலுவலகம் அருகில் சந்தித்துள்ளனர். அங்கு மீண்டும் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு சுரேஷ்குமார், லோகநாதன், சத்யானந்தம், அபினேஷ், ரமேஷ் உள்ளிட்டோர் பிரவீன், திவாகர், விக்னேஷ், ஆனந்தகுமார் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு, சுரேஷ்குமார், லோகநாதன், சத்யானந்தம், அபினேஷ், ரமேஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
