/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராம வளர்ச்சி திட்ட டெண்டர் திறப்பதில் வாக்குவாதம்
/
கிராம வளர்ச்சி திட்ட டெண்டர் திறப்பதில் வாக்குவாதம்
கிராம வளர்ச்சி திட்ட டெண்டர் திறப்பதில் வாக்குவாதம்
கிராம வளர்ச்சி திட்ட டெண்டர் திறப்பதில் வாக்குவாதம்
ADDED : மே 06, 2025 11:12 PM
அன்னுார்: அண்ணா மறுமலர்ச்சி திட்ட டெண்டர் திறப்பு வாக்குவாதத்தால் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக அரசு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில், ஒவ்வொரு ஊராட்சிக்கும் சராசரியாக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
அன்னுார் ஒன்றியத்தில், காட்டம்பட்டி ஊராட்சிக்கு 48 லட்சத்து 36 ஆயிரம் ரூபாயும், வடக்கலூர் ஊராட்சிக்கு 47 லட்சத்து 96 ஆயிரம் ரூபாயும், கணுவக்கரை ஊராட்சிக்கு 42 லட்சத்து 42 ஆயிரம் ரூபாயும், மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சிக்கு 54 லட்சத்து 36 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான டெண்டர்கள் பெறப்பட்டன. நேற்று டெண்டர் திறப்பதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரன், ஒன்றிய பொறியாளர்கள் தங்கமணி, சந்திரகலா பங்கேற்றனர்.
ஒப்பந்ததாரர்களில், ஒரு தரப்பினர் தங்களுக்குள் பேசி பணிகளை பகிர்ந்து கொள்ள முடிவு செய்தனர். எனினும் அவிநாசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., கருப்புசாமி, டெண்டர் திறந்து, யார் குறைவான மதிப்பீட்டில், பணி செய்ய டெண்டர் கொடுத்துள்ளாரோ, அவருக்கு பணி ஒதுக்க வேண்டும். பேசி முடிவு செய்யக் கூடாது, என எதிர்ப்பு தெரிவித்தார்.
எனினும், மற்றொரு தரப்பினர், இதை ஏற்கவில்லை. இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒப்பந்ததாரர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால், டெண்டர் ஒத்திவைக்கப்பட்டது.
மறுபடியும் டெண்டர் திறப்பின்போது தனக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென முன்னாள் எம்.எல்.ஏ., கருப்புசாமி அதிகாரிகளிடம் கடிதம் கொடுத்துவிட்டு சென்றார்.