/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனியார் கல்லுாரி அங்கீகாரத்தில் சர்ச்சை 300 மாணவர்களின் எதிர்காலம் கேள்வி
/
தனியார் கல்லுாரி அங்கீகாரத்தில் சர்ச்சை 300 மாணவர்களின் எதிர்காலம் கேள்வி
தனியார் கல்லுாரி அங்கீகாரத்தில் சர்ச்சை 300 மாணவர்களின் எதிர்காலம் கேள்வி
தனியார் கல்லுாரி அங்கீகாரத்தில் சர்ச்சை 300 மாணவர்களின் எதிர்காலம் கேள்வி
ADDED : ஜூலை 26, 2025 10:44 PM

கிணத்துக்கடவு,:'கிணத் துக்கடவு அருகே, கொண்டம்பட்டியில் உள்ள மகாராஜா ஹெல்த் இன்ஸ்டிடியூட்டிற்கு அங்கீகாரம் இல்லை; பல்வேறு முறைகேடு நடக்கிறது' என, மாணவர்கள் புகார் தெரிவித்த நிலையில், அரசு மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியில் உள்ள மகாராஜா ஹெல்த் இன்ஸ்டிடியூட், ராஜஸ்தானில் உள்ள 'சன் ரைஸ்' மற்றும் 'சிங்கைனியா' பல்கலை அங்கீகாரம் பெற்று செயல்படுவதாக கூறப்படுகிறது.
இங்கு, ஆயுர்வேதம் மற்றும் அறுவை சிகிச்சை போன்ற படிப்புகள் உள்ளன. நான்கு துறைகளில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த கல்வி நிறுவனத்துக்கு முறையான அனுமதி உள்ளதா, இல்லையா என, சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், மாணவர்களே, ராஜஸ்தானில் உள்ள 'சன் ரைஸ்' பல்கலையில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, 'சன் ரைஸ் பல்கலை சார்பில், தமிழகத்தில் எந்த கல்லுாரிக்கும் அனுமதி கொடுக்கவில்லை. எங்களுக்கு ராஜஸ்தானில் மட்டுமே கல்லுாரி உள்ளது' என, தெரிவித்துள்ளனர்.
சந்தேகமடைந்த மாணவர்கள், கோவை கலெக்டர் அலுவலகத்தில், 'கல்லுாரிக்கு அங்கீகாரம் உள்ளதா, இல்லையா என தெரியவில்லை. உரிய விசாரணை நடத்த வேண்டும்' என, மனு அளித்தனர்.
மாவட்ட நிர்வாக உத்தரவில், கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தலைமையிலான மருத்துவ குழுவினர், மகாராஜா ஹெல்த் இன்ஸ்டிடியூட்டில் ஆய்வு மேற்கொண்டனர். டீன் நிர்மலாவிடம் கேட்டபோது, ''ஆய்வு செய்துள்ளோம். இது தொடர்பான அறிக்கை கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படும்,'' என்றார்.
இக்கல்லுாரிக்கு அங்கீகாரம் உள்ளதா, இல்லையா என்ற பிரச்னை கிளம்பியுள்ள நிலையில், இங்கு படிக்கும், 300க்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.