/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்றி வாழையடி வாழையாய் வருமானம்!
/
மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்றி வாழையடி வாழையாய் வருமானம்!
மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்றி வாழையடி வாழையாய் வருமானம்!
மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்றி வாழையடி வாழையாய் வருமானம்!
ADDED : மே 04, 2025 12:43 AM

உணவுக்கு பின் ஒரு வாழைப்பழம், செரிமானத்துக்கு நல்லது. தெரிந்த இந்த விஷயத்தை தாண்டி, வாழையில் ஏராளமான பொருளாதார விஷயங்கள் இருக்கின்றன என, உதாரணம் காட்டுகிறார், காரமடை அருகே, பெள்ளாதி அண்ணா நகரில் வசிக்கும் சம்பத்குமார், 46.
இவர் ஒரு விவசாயி. காய்கறி விவசாயம் மேற்கொண்டாலும், பிரதானம் வாழை. வாழைக்காய் மற்றும் பழங்களை ட்ரை ப்ரூட்ஸ், ஜாம், பவுடர், சிப்ஸ் உட்பட மதிப்பு கூட்டு பொருட்களாக உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார்.
சம்பத்திடம் பேசினோம்...
விவசாயத்தில் கூடுதல் லாபம் பார்க்க, மதிப்பு கூட்டு பொருளாக உற்பத்தி செய்து விற்க வேண்டும். வாழைகளுக்கு இடையே, தக்காளியை ஊடு பயிராக வளர்ப்பதால் அதிலும் லாபம் பார்க்க முடிகிறது.
நேந்திரன், கதளி உள்ளிட்ட ரகங்களை, ஆறு அடிக்கு ஒன்று என்றும், தேன் வாழை, செவ்வாழை, பூவன் உள்ளிட்ட வாழை ரகங்களை, அடர் நடவு முறையிலும் நட்டு பராமரிக்க வேண்டும். இதனால், ஐந்து ஆண்டுகளுக்கு வாழை அறுவடை செய்யலாம்.
வாழைத்தார்களை வாடிக்கையாளர்களுக்கு, நேரடியாக விற்பனை செய்கிறேன். மீதமாகும் தார்களில் இருந்து எடுக்கப்படும் காய் மற்றும் பழங்களை வைத்து, மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்கிறேன்.
காரமடை அரங்கநாதர் உழவர் உற்பத்தியாளர் குழு வாயிலாக, மதிப்பு கூட்டு பொருட்களாக உற்பத்தி செய்ய, அனைத்து வேளாண் உதவி, ஆலோசனைகளை, காரமடை வேளாண் அறிவியல் நிலையம் அளிக்கிறது.
மதிப்பு கூட்டு பொருட்களுக்கு மார்க்கெட்டில் நல்ல விலை உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.---

