/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்டனை பெற்றவர் கோர்ட்டில் 'கலாட்டா'
/
தண்டனை பெற்றவர் கோர்ட்டில் 'கலாட்டா'
ADDED : நவ 14, 2024 09:19 PM
கோவை; வழிப்பறி வழக்கில் தண்டனை பெற்றவர், கோர்ட்டில் கலாட்டாவில் ஈடுபட்டார்.
கோவை, தெற்கு உக்கடம், அல்அமீன் காலனியை சேர்ந்தவர் ரிஸ்வான்,31. கடந்த 2023 ல், வழிப்பறியில் ஈடுபட்டதால், பெரிய கடை வீதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது, கோவை முதலாவது கூடுதல் சார்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி செந்தில்குமார், குற்றம் சாட்டப்பட்ட ரிஸ்வானுக்கு, ஓராண்டு சிறை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆஜரானார்.
தீர்ப்புக்கு பிறகு, கோர்ட் ஹாலில் கலாட்டா செய்த ரிஸ்வான், அரசு வக்கீலை பார்த்து, 'சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு பார்த்து கொள்கிறேன்' என்று மிரட்டல் விடுத்தார். உடனேபோலீசார் வரவழைக்கப்பட்டு, ரிஸ்வான் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.