/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நேரு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
நேரு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : மார் 18, 2025 11:22 PM

கோவை; நேரு தொழில்நுட்பக் கல்லுாரியின், 13வது பட்டமளிப்பு விழா, நேரு கல்வி குழுமங்களின் செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடந்தது.
இதில், நிடி ஆயோக் முன்னாள் கூடுதல் செயலாளர் ரமணன் ராமநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அவர் பேசுகையில், ''முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் போல், பெரிய கனவுகளை கண்டு அதற்காக உழைக்க வேண்டும். பட்டதாரிகள் வேலைவாய்ப்பை மட்டும் தேடாமல், தொழில்முனைவோராகவும் மாற வேண்டும்,'' என்றார்.
விழாவில், ஏரோநாட்டிக்கல், வேளாண் மற்றும் சிவில் பொறியியல், வணிக நிர்வாகம், உணவு தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளின் கீழ், 137 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
நேரு சர்வதேச பள்ளியின் தாளாளர் சைதன்யா, நேரு கல்வி குழுமத்தின் கல்வி மற்றும் நிர்வாக இயக்குனர் நாகராஜா, நேரு தொழில்நுட்பக் கல்லுாரியின் முதல்வர் சிவராஜா மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் விழாவில் பங்கேற்றனர்.