நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : ஆனைமலை அடுத்த புளியங்கண்டி பகுதியை சேர்ந்தவர் கோபால்பாண்டி. இவர், அங்கலக்குறிச்சியில் உள்ள தனியார் தோட்டத்தில் வேலை செய்கிறார். அங்கு, காக்கைகள் கூட்டமாக, ஆந்தை ஒன்றை துரத்தி கொத்திக் கொண்டு இருப்பதை பார்த்துள்ளார்.
துரிதமாக செயல்பட்ட அவர், காக்கைகளை விரட்டி, ஆந்தையை மீட்டார். தொடர்ந்து, வனத்துறையினரிடம் ஆந்தையை ஒப்படைத்தார். அந்த ஆந்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விட்டனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'காக்கைகளிடம் இருந்து மீட்கப்பட்டது, கூகை வகை ஆந்தையாகும். பகல் நேரத்தில் காக்கைகளிடம் சிக்கிக்கொண்டது. அதை வனத்தில் விட்டுள்ளோம்,' என்றனர்.