/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குன்னுார் சிறையில் சமையலர் வேலை
/
குன்னுார் சிறையில் சமையலர் வேலை
ADDED : டிச 31, 2025 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை மத்திய சிறை கட்டுப்பாட்டிலுள்ள, குன்னூர் கிளைச்சிறையில் காலியாக உள்ள ஒரு சமையலர் பணியிடத்தை நிரப்ப, தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணியிடம் பழங்குடியின சுழற்சியில் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடத்துக்கு 37 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியம். 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். சமையல் பணியில் 2 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தகுதியுள்ள நபர்கள் சம்மந்தப்பட்ட சான்றிதழ்களின் நகல்களுடன் சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறை கோவை --18 என்ற முகவரியிட்டு வரும் ஜன.,1 ம் தேதி மாலை 5.45க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

