/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களை புரிந்து கையாள இரு நாள் பயிற்சி
/
மாணவர்களை புரிந்து கையாள இரு நாள் பயிற்சி
ADDED : டிச 31, 2025 05:10 AM
கோவை: மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில் தலைமையாசிரியர்களுக்கான, இரண்டு நாள் புத்தாக்கபயிற்சி முகாம் நடைபெறுகிறது.
கோவை வருவாய் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 50 தலைமையாசிரியர்கள், பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.
ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், 'தலைமையாசிரியர்களின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் வகையில் சிறப்பு யோகா பயிற்சி வழங்கப்படுகிறது.
'மாணவர்களின் தற்போதைய மனநிலையைப் புரிந்து கொண்டு, அதற்கேற்பக் கற்பித்தல் முறைகளை எவ்வாறு கையாள்வது, வகுப்பறை சூழலை சிறந்த முறையில் பராமரிப்பது மற்றும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து பள்ளியை சிறப்பாக வழிநடத்துவது என்பது குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
'தலைமையாசிரியர்களின் நிர்வாகத் திறனை மேம்படுத்தவும், பள்ளிகளில் ஆரோக்கியமான கல்வி சூழலை உருவாக்கவும், இந்த பயிற்சி முகாம் ஒரு முக்கியத் தளமாக அமையும்' என்றனர்.

