/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காஸ் அடுப்பு வைத்து சமைத்து புலிகள் காப்பகத்தில் அலப்பறை
/
காஸ் அடுப்பு வைத்து சமைத்து புலிகள் காப்பகத்தில் அலப்பறை
காஸ் அடுப்பு வைத்து சமைத்து புலிகள் காப்பகத்தில் அலப்பறை
காஸ் அடுப்பு வைத்து சமைத்து புலிகள் காப்பகத்தில் அலப்பறை
ADDED : ஏப் 04, 2025 06:52 AM

வால்பாறை : ஆனைமலை புலிகள் காப்பகத்தில், சுற்றுலா பயணியர் விதிமுறை மீறி சாலையோரம் காஸ் அடுப்பு வைத்து சமையல் செய்வது தொடர்கிறது.
கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகம் வருகின்றனர். புலிகள் காப்பக பகுதியில், ரோட்டோரத்தில் வாகனம் நிறுத்தவும், வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில், வாகனங்களில் பாடல்கள் ஒலிக்கவும், ரோட்டோரத்தில் சமையல் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று வால்பாறை - சோலையாறு அணை செல்லும் ரோட்டில், மாணிக்கா எஸ்டேட் பகுதியில், சுற்றுலா பயணியர் காஸ் சிலிண்டர் வைத்து சமைத்தனர். பின், 'ஸ்பீக்கர்' பாக்ஸ்சில் அதிகமாக சப்தத்துடன் பாடல்களை ஒலிக்க செய்து, ஆட்டம் போட்டனர்.
வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் விதிமுறையை மீறி சுற்றுலா பயணியர் உணவு சமைப்பதை வனத்துறையினர் கண்காணித்து உடனடியாக அபராதம் விதிக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிக அளவில் வருகின்றனர். புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட எந்த பகுதியிலும், ரோட்டில் வாகனங்களை நிறுத்தி உணவு சமைக்ககூடாது. கண்டறியப்பட்டால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும்' என்றனர்.

