/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூட்டுறவு வார விழா நிகழ்ச்சிகள் துவக்கம்
/
கூட்டுறவு வார விழா நிகழ்ச்சிகள் துவக்கம்
ADDED : நவ 14, 2025 10:54 PM

கோவை: கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், கூட்டுறவு வார விழா நிகழ்ச்சிகள் துவங்கின.
ஒவ்வொரு ஆண்டும், நவ.14ம் தேதி முதல் 20ம் தேதி வரை, கூட்டுறவு வார விழா, இந்தியா முழுவதில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களால் கொண்டாடப்படுகிறது. கூட்டுறவு இயக்கத்தையும், கூட்டுறவு அமைப்புகளையும் மேம்படுத்துவது, இதன் முக்கிய நோக்கமாக உள்ளது.
கோவை மாவட்டத்தில், 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, முதல் நிகழ்ச்சியாக, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில், வங்கியின் மேலாண்மை இயக்குனர் ராமகிருஷ்ணன், கூட்டுறவுக் கொடி ஏற்றினார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, கூட்டுறவு கீதம் பாடப்பட்டது.
மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர், பொது மேலாளர், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குனர் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து ஒரு வாரத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

