/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'இ-நாம்' திட்டத்தில் கொப்பரை ஏலம் கடந்தாண்டு ரூ.32.71 கோடி வர்த்தகம்
/
'இ-நாம்' திட்டத்தில் கொப்பரை ஏலம் கடந்தாண்டு ரூ.32.71 கோடி வர்த்தகம்
'இ-நாம்' திட்டத்தில் கொப்பரை ஏலம் கடந்தாண்டு ரூ.32.71 கோடி வர்த்தகம்
'இ-நாம்' திட்டத்தில் கொப்பரை ஏலம் கடந்தாண்டு ரூ.32.71 கோடி வர்த்தகம்
ADDED : ஜன 06, 2024 12:31 AM
ஆனைமலை;ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஓர் ஆண்டில், கொப்பரை ஏலத்தில், 32 கோடியே, 71 லட்சத்து, 68 ஆயிரத்து, 360 ரூபாய்க்கு பரிவர்த்தனை ஆகியுள்ளது.
பொள்ளாச்சி அருகே, ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ், வாரந்தோறும் செவ்வாய் கிழமையில் கொப்பரை ஏலம் நடக்கிறது.
விவசாயிகள், கொப்பரை மூட்டைகளை ஏலத்துக்கு கொண்டு வந்து நேரடியாக வியாபாரிகளிடம் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வியாழக்கிழமைகளில், வாழைத்தார், தேங்காய் ஏலமும் நடக்கிறது.
ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்முருகன் கூறியதாவது:
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த ஆண்டில், 60,252 கொப்பரை மூட்டைகள் (3,012.6 டன்) வந்தது. மொத்தம், 32 கோடியே, 71 லட்சத்து, 68 ஆயிரத்து, 360 ரூபாய் மதிப்பில் பரிவர்த்தனை நடந்தது.
ஏலத்தில், 2,069 விவசாயிகள் பயன்பெற்றனர். கொப்பரை கிலோவுக்கு அதிகபட்மாக, 88.76 ரூபாயும், குறைந்த பட்சம், 77.25 ரூபாய்க்கும் விற்றது.
தேங்காய் ஏலம்
மொத்தம், 5,99,373 ரூபாய் மதிப்பிலான தேங்காய், 24.973 டன் வரத்து இருந்தது. 105 விவசாயிகள், 67 வியாபாரிகள் பங்கேற்றனர். வாழைத்தார், 4,21,221 ரூபாய் மதிப்பிலான, 16,072 டன் பரிவர்த்தனை நடந்தது. 76 விவசாயிகள், 58 வியாபாரிகள் பங்கேற்றனர்.
மேலும், 35 ஆயிரம் மதிப்புள்ள, 0.50 டன் தேன் பரிவர்த்தனையும் செய்யப்பட்டது. மொத்தம், மூன்று விவசாயிகள், இரண்டு வியாபாரிகள் பங்கேற்றனர். ஏலத்தில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு, அவர் கூறினர்.