/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிவன்மலை கோவில் பெட்டியில் காசி தீர்த்தத்துடன் செம்புக்கலசம்
/
சிவன்மலை கோவில் பெட்டியில் காசி தீர்த்தத்துடன் செம்புக்கலசம்
சிவன்மலை கோவில் பெட்டியில் காசி தீர்த்தத்துடன் செம்புக்கலசம்
சிவன்மலை கோவில் பெட்டியில் காசி தீர்த்தத்துடன் செம்புக்கலசம்
ADDED : டிச 10, 2024 08:35 AM

திருப்பூர் : சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில், நேற்று காசி தீர்த்தத்துடன் செம்புக் கலசம் வைத்து சிறப்புபூஜை நடந்தது.
திருப்பூர் மாவட்டம், சிவன்மலை ஸ்ரீசுப்ரமணியர் கோவிலில், ஆண்டவர் உத்தரவு பெட்டி வழிபாடு நடைமுறையில் உள்ளது. முருகப்பெருமான் பக்தர்கள் கனவில் தோன்றி உணர்த்தும் பொருளை, பெட்டியில் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. கடந்த மாதம், 12ம் தேதி, மண் அகல் விளக்கு வைக்கப்பட்டது.
இந்நிலையில், இப்பெட்டியில், சிறிய செம்பு கலசத்தில் அடைக்கப்பட்ட காசி தீர்த்தம் வைத்து, நேற்று சிறப்பு பூஜைகள் நடந்துள்ளது.
கூனம்பட்டி குருகுல வேதாகம பாடசாலை முதல்வர் நடராஜ சுவாமி கூறுகையில், ''உலகில் பிரளயம் ஏற்படும் போது, நீர், நெருப்பு மற்றும் காற்றால் பாதிப்பு நிகழும். கடந்த முறை, உத்தரவு பெட்டியில், மண் விளக்கு வைக்கப்பட்ட தருணத்தில், மகா தீபம் ஏற்றி வைக்கும் திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டது. தற்போது, காசி தீர்த்தம் எனப்படும் கங்கா தீர்த்தம் வைக்கப்பட்டுள்ளது; வெள்ளம் தொடர்பான நிகழ்வுகளை உணர்த்துவதாக இருக்கலாம். பக்தர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. 'கந்தன் பாதம் கனவிலும் காக்கும்' என்று முன்னோர் கூறியுள்ளனர். உலக நலன் வேண்டி இறைவழிபாடு செய்தால், இயற்கை சீற்றத்தை தணிக்கலாம்'' என்றார்.

