/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காப்பர் ஒயர் திருடியவர்கள் கைது
/
காப்பர் ஒயர் திருடியவர்கள் கைது
ADDED : மே 05, 2025 04:41 AM
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் காப்பர் ஒயர் திருடிய நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரியநாயக்கன்பாளையம் போலீஸ்எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு நிறுவனங்களின் கதவுகளை உடைத்து, உள்ளே இருந்த காப்பர் ஒயர்கள் திருடப்பட்டு வந்தன.
இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., பொன்னுசாமி தலைமையில், பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், எஸ்.ஐ., செந்தில்குமார், நமச்சிவாயம், சிறப்பு எஸ்.ஐ., சசிகுமார் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இது தொடர்பான பல்வேறு இடங்களில் உள்ள 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்ததில் கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பாபு, 32, தடாகம் ரோடு, கோவில்மேடு பகுதி அருண், 31, இக்கரை போளுவாம்பட்டி அனந்தகுமார் 30, திருப்பூர் செல்ல செட்டிபுரம் சுரேஷ்குமார், 23, ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து, 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் ஒயர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.