ADDED : நவ 29, 2025 05:55 AM
அ நிறம் | அளவு
நெகமம்: நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 88 ஆயிரம் ரூபாய்க்கு கொப்பரை ஏலம் நடந்தது.
நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் பலர் கொப்பரை, தேங்காய் உள்ளிட்ட விளை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இங்கு வாரம் தோறும் வியாழக்கிழமை நாட்களில் ஏலம் நடக்கிறது.
நேற்று நடந்த ஏலத்தில், 50 கிலோ வீதம் எடையுள்ள, 14 மூட்டைகள் கொப்பரை, 88 ஆயிரத்து, 705 ரூபாய்க்கு விற்பனையானது. முதல் தர கொப்பரை, 190.65 முதல் 193.05 ரூபாய்க்கும், இரண்டாம் தர கொப்பரை, 143.29 முதல் 158.29 ரூபாய்க்கும் விற்பனையானது. இதில், 8 விவசாயிகள் மற்றும் 3 வியாபாரிகள் பயனடைந்தனர். இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
