/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.90 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம்
/
ரூ.90 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம்
ADDED : மே 01, 2025 11:38 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, வடக்கிபாளையம் துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 90 ஆயிரம் ரூபாய்க்கு கொப்பரை ஏலம் நடந்தது.
பொள்ளாச்சி, வடக்கிபாளையம் துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்றுமுன்தினம் கொப்பரை ஏலம் நடந்தது. இதில், முதல் தர கொப்பரை, 10 மூட்டைகள் ஏலம் விடப்பட்டது. இதில், அதிகபட்சமாக, 178 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக, 172.50 ரூபாய்க்கும் விற்பனையானது.
இதேபோன்று, இரண்டாம் தர கொப்பரை, 8 மூட்டைகள் விற்பனையானது. இதில் அதிகபட்ச விலையாக, 149.50 ரூபாயும், குறைந்தபட்சமாக, 122 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தமாக, 18 கொப்பரை மூட்டைகள், 90 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
இதில், 18 விவசாயிகள் மற்றும் 3 உள்மாவட்ட வியாபாரிகள், 5 வெளிமாவட்ட வியாபாரிகள் பயனடைந்தனர். இத்தகவலை, விற்பனை கூட கண்காணிப்பாளர் செல்வராஜ் தெரிவித்தார்.