ADDED : அக் 25, 2024 09:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனைமலை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நடந்தது.
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமையில் கொப்பரை ஏலம் நடந்தது.
முதல் தர கொப்பரை, 52 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 117.09 முதல், 120.19 ரூபாய் வரை விலை கிடைத்தது.
இரண்டாம் தர கொப்பரை, 90 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 78.50 முதல், 103.50 ரூபாய் வரை விலை கிடைத்தது.மொத்தம், 142 கொப்பரை மூட்டைகளை, 46 விவசாயிகள் கொண்டு வந்தனர்; ஒன்பது வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.
இந்த வாரம், 7.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொத்தம், 63.90 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன.
இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.