ADDED : மார் 19, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
ஆனைமலை: ஆனைமலையில் நடந்த கொப்பரை ஏலத்தில் கிலோவுக்கு அதிகபட்சமாக, 147.11 ரூபாய் விலை கிடைத்தது.
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கண்காணிப்பாளர் (பொ) ஜெயராமகிருஷ்ணன் தலைமையில் கொப்பரை ஏலம் நடந்தது. முதல் தர கொப்பரை, 275 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 130 ரூபாய் முதல், 147.11 ரூபாய் வரை விலை கிடைத்தது.
இரண்டாம் தர கொப்பரை, 437 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 100 முதல், 129.89 ரூபாய் வரை விலை கிடைத்தது. மொத்தம், 712 கொப்பரை மூட்டைகளை, 102 விவசாயிகள் கொண்டு வந்தனர். எட்டு வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.
இந்த வாரம், 38.6 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொத்தம், 245 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன. இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
