ADDED : ஜூன் 12, 2026 04:12 AM
அ நிறம் | அளவு
ஆனைமலை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கண்காணிப்பாளர் (பொ) ஜெயராமகிருஷ்ணன் தலைமையில் கொப்பரை ஏலம் நடந்தது.
முதல் தர கொப்பரை, 544 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 116 ரூபாய் முதல், 126.21 வரை விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை, 425 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 60.45 ரூபாய் முதல், 115 வரை விலை கிடைத்தது.
மொத்தம், 969 கொப்பரை மூட்டைகளை, 240 விவசாயிகள் கொண்டு வந்தனர், 10 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். இந்த வாரம், 47.90 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 436.05 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன. இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
