ADDED : ஜூன் 12, 2026 04:11 AM
அ நிறம் | அளவு
கோவை: மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய 'லோக்அதலாத்' விசாரணை, கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, மதுக்கரை, சூலுார் மற்றும் அன்னுார் ஆகிய நீதிமன்ற வளாகத்தில் நாளை (13 ம் தேதி) நடக்கிறது.
நிலுவையிலுள்ள வழக்குகளில், சிறு குற்ற வழக்குகள், காசோலை மோசடி, வாகன விபத்து இழப்பீடு, நில ஆர்ஜிதம், சிவில் வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, தொழிலாளர் மற்றும் குடும்ப நலன் மற்றும் கடன் வசூல் தீர்ப்பாயம் உள்ளிட்ட வழக்குகளில் இரு தரப்பினர் இடையே சமரச தீர்வு காணப்படுகிறது.
