தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிரைம் கார்னர்:கோவை

 கிரைம் கார்னர்:கோவை

 கிரைம் கார்னர்:கோவை


ADDED : ஜூன் 12, 2026 04:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2026 04:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிறுமி கொலை: 2 பேருக்கு சார்ஜ் ஷீட் சூலுார் அருகே, 10 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் பிடிபட்ட நாகை கார்த்திக்,33, தஞ்சாவூர் மோகன்,31, ஆகியோருக்கு கோவை முதன்மை போக்சோ கோர்ட்டில், நேற்று 819 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

வக்கீல் வைத்து வாதாட வசதி இல்லை என்று கூறியதால், அவர்கள் தரப்பில் ஆஜராக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இரண்டு இலவச வக்கீல்கள் நியமிக்கப்பட்டனர்.

பெட்ரோல் குண்டு வழக்கில், போலீஸ் திணறல் கலிக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 21 வயது பெண், சென்னையை சேர்ந்த கார்த்தி என்ற மாரியப்பன் என்பவருடன், இன்ஸ்டாகிராமில் பழகினார். அந்த ஆள் மீது 34 வழக்குகள் உள்ளன என்று தெரிந்ததும், உறவை துண்டித்தார். ஆத்திரமான கார்த்தி, 3 பேருடன் கோவை வந்து, பெண்ணின் வீடு மீது பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு ஓடினார். மூன்று வாரங்கள் ஆகியும், குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.

பேரூர் டி.எஸ்.பி. சுரேஷிடம் கேட்டபோது,குற்றவாளிகளின் 2 பைக் சிக்கியுள்ளது. விரைவில் ஆட்களை பிடித்து விடுவோம் என்றார்.

3 கிலோ கஞ்சாவுடன் கழிப்பறையில் கைது

ராமநாதபுரம் போலீசார், புலியகுளம் ரெட்பீல்டு பகுதியில் ரோந்து சென்றபோது, பொது கழிப்பிட வாசலில் நின்ற, அம்மன்குளம் ஜோஸ்,36, என்பவரை விசாரித்தனர். விற்பதற்கு அவர் வைத்திருந்த மூன்றே கால் கிலோ கஞ்சாவை கைப்பற்றி, ஜோஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆம்னி பஸ்ஸில் ட்ராலி பேக் மாயம்

கோவைக்கு வந்த சென்னை, சூளையை சேர்ந்த கவிபிரியா,27, தென்காசி செல்ல 'எஸ்பிஎஸ் டிராவல்ஸ்' பஸ்சில் டிக்கெட் முன்பதிவு செய்தார். காந்திபுரத்தில் பஸ் ஏறினார். திண்டுக்கல் மாவட்டம், கொடை ரோடு டோல்கேட் அருகே பஸ் பழுதானது. மாற்று பஸ் ஏற்பாடு செய்தனர். லக்கேஜ் பகுதியில் வைத்த அவரது டிராலி பேக்கை எடுக்க சென்ற போது, அதை காணவில்லை. காட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

எம்.சாண்ட் ஏற்றி சென்ற லாரி பறிமுதல்

கனிமவள துணை தாசில்தார் கணேசன், மேட்டுப்பாளையம் ரோட்டில் ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி ஆய்வு செய்தார். அதில், 3 யூனிட் எம்.சாண்ட் இருந்தது. அதற்கான ரசீது, அனுமதி இல்லை. சாய்பாபா காலனி போலீஸ் வழக்கு பதிவு செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us