ADDED : செப் 24, 2026 07:22 PM
அ நிறம் | அளவு
உடுமலை: உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த கொப்பரை ஏலத்தில், கிலோ ரூ. 153.15க்கு விற்பனையானது.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ–நாம் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஏலத்திற்கு, 54 விவசாயிகள், 624 மூட்டை கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இ–நாம் திட்டத்தின் கீழ், நடந்த ஏலத்தில், 7 வியாபாரிகள் பங்கேற்றனர். முதல் தரம், ரூ.130 முதல், ரூ.153.15 வரையும், இரண்டாம் தரம், ரூ. 65.69 முதல், ரூ. 127.89 வரையும், இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டதாக, திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் சண்முக சுந்தரம், ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பொறுப்பு அருண்குமார் தெரிவித்தனர்.
