ADDED : ஜூன் 23, 2025 11:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம்; நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இம்மாதம், 1.71 கோடி ரூபாய்க்கு கொப்பரை விற்பனையானது.
நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஏராளமான விவசாயிகள் கொப்பரை மற்றும் இதர விளை பொருட்களை இருப்பு வைத்து, தேவைக்கு ஏற்ப விற்பனை செய்கின்றனர்.
இதில், இந்த மாதத்தில், 1,495 (50 கிலோ) கொப்பரை மூட்டைகள், 1.71 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது. ஒரு கிலோ கொப்பரை, 230 முதல் 235 ரூபாய் வரை விற்பனையானது. விவசாயிகள் 14 பேர் மற்றும் வியாபாரிகள் 4 பேர் பயனடைந்தனர்.
தற்போது, தேங்காய் வரத்து வழக்கத்தை விட குறைவாக இருப்பதால், கொப்பரைக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. இத்தகவலை, விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் தெரிவித்தார்.