/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.57.47 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
/
ரூ.57.47 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
ADDED : ஏப் 23, 2025 12:42 AM
நெகமம்; நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில், 57.47 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை வர்த்தகம் நடந்தது.
நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கடந்த, 10 நாட்களில், 50 கிலோ எடையுள்ள, 578 கொப்பரை மூட்டைகள், 57 லட்சத்து, 47 ஆயிரம் ரூபாய்க்கு ஏல முறையில் விற்பனை ஆனது.
இதில், முதல் தர கொப்பரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ கொப்பரை அதிகபட்சமாக, 181க்கும்; குறைந்த பட்சமாக 180 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இதில், 3 வியாபாரிகள் மற்றும் 6 விவசாயிகள் பயனடைந்தார்கள்.
மேலும், விற்பனை கூடத்தில், உலர் கலம், விளை பொருட்கள் இருப்பு வைக்க இட வசதி மற்றும் பொருளீட்டுக்கடன் போன்றவைகள் உள்ளது. இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகவலை, விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜெயராம கிருஷ்ணன் தெரிவித்தார்.