ADDED : பிப் 12, 2025 11:41 PM
அன்னுார்; அன்னுார், சத்தி ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இரு வாரங்களுக்கு முன்பு, தேங்காய் மற்றும் கொப்பரை ஏல விற்பனை துவங்கியது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று ஏல விற்பனை நடைபெறுகிறது.
நேற்று நடந்த இடத்தில் 369 கிலோ எடையுள்ள ஒன்பது மூட்டை தேங்காய் கொப்பரை விற்பனைக்கு வந்தது. இதனுடைய மதிப்பு 52 ஆயிரத்து 469 ரூபாய் ஆகும். குறைந்தது ஒரு கிலோ 140 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 144 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து விற்பனை கூட கண்காணிப்பாளர் சந்திரசேகர் கூறுகையில், விவசாயிகள் அனைத்து விளைபொருட்களையும் விற்பனைக்கு கொண்டு வரலாம். எந்த கமிஷனும் தரத் தேவையில்லை.
தங்கள் விளை பொருட்களை இங்கு உள்ள கிடங்குகளில் இருப்பு வைத்து நல்ல விலை வரும்போது விற்கலாம். இருப்பு வைத்த பொருட்களுக்கு குறைந்த வட்டியில் கடன் பெறலாம், என தெரிவித்தார். தேங்காய் கொப்பரைக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.