/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.2.36 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
/
ரூ.2.36 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
ADDED : அக் 24, 2025 11:50 PM
நெகமம்: நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 2.36 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை விற்பனை செய்யப்பட்டது.
நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வாரம் தோறும் தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் நடக்கிறது. இதில், 36 மூட்டைகள் (50 கிலோ) கொப்பரை, 2 லட்சத்து, 36 ஆயிரத்து, 846 ரூபாய்க்கு விற்பனையானது.
இதில், முதல் தர கொப்பரை, குறைந்தபட்சமாக 187 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 217 ரூபாய்க்கும் விற்பனையானது. இரண்டாம் தர கொப்பரை, 117 முதல் 186 ரூபாய்க்கு விற்பனையானது. இதில், 24 விவசாயிகள் மற்றும் 7 வியாபாரிகள் பங்கேற்றனர்.
மேலும், நெகமம் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை, விற்பனை கூடத்தின் வாயிலாக இருப்பு வைத்து விற்பனை செய்து பயன்பெறலாம்.
கூடுதல் விவரங்கள் தெரிந்துகொள்ள, ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலர்களை சந்தித்து தகவல்கள் பெறலாம். இத்தகவலை நெகமம் விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

