/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.67.6 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
/
ரூ.67.6 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
ADDED : ஏப் 08, 2025 10:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம், நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் வாயிலாக, விவசாயிகள் விளை பொருட்களை விற்பனை செய்தும், விலை ஏற்றத்தின் போது விற்பனை செய்வதற்காக, இங்கு உள்ள கிடங்கில் விளைபொருளை இருப்பு வைத்தும், விலை உயரும் போது விற்பனை செய்கின்றனர்.
இதில், கடந்த வாரம், 43.05 மெட்ரிக் டன் அளவு கொப்பரை, 67 லட்சத்து, 60 ஆயிரத்து, 300 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இதில், முதல் தர கொப்பரை, 175 முதல் 180 ரூபாய்க்கும், இரண்டாம் தர கொப்பரை, 148 முதல் 155 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. இதன் வாயிலாக, 10 விவசாயிகள் மற்றும் 4 வியாபாரிகள் பயனடைந்தனர். இத்தகவலை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜெயராம கிருஷ்ணன் தெரிவித்தார்.

