/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிர்மலா கல்லுாரியில் பவளவிழா உற்சாகம்
/
நிர்மலா கல்லுாரியில் பவளவிழா உற்சாகம்
ADDED : பிப் 13, 2024 12:12 AM
கோவை:நிர்மலா கல்லுாரி, கல்வி பயணத்தில் 75 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில், பவளவிழா நடந்தது.
நற்கருணை ஆசிர்வாத கொண்டாட்டம், ஜெரோம் தலைமையில் நடந்தது. விழாவில் கல்லுாரி அறிக்கையை முதல்வர் மேரி பபியோலா வாசித்தார்.
சிறப்பு விருந்தினர், புதுடில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலை துணைவேந்தர் சாந்தி ஸ்ரீ துலிபுடி பண்டிட் பங்கேற்று, மகளிர் மேம்பாடு குறித்து பேசினார். நிர்மலா கல்வி குழுமங்களின் தலைவி பபிலீனெட், விழா மலர் வெளியிட்டு, வாழ்த்துரை வழங்கினார்.
முன்னாள் மாணவியும், கோவை மகளிர் மைய இயக்குனருமான மிருதுபாஷினி கல்லுாரி காலத்தில் தாம் பெற்ற அனுபவங்களை, பகிர்ந்து கொண்டார். கல்லுாரி கல்வி இணை இயக்குனர் கலைசெல்வி, இரவேல் மறை மாநில தலைவி வலேரியா உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர்.