/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெயிலிலும் விவசாயிகள் வாழ்வில் 'மணம் வீசுது' கொத்தமல்லி இலை
/
வெயிலிலும் விவசாயிகள் வாழ்வில் 'மணம் வீசுது' கொத்தமல்லி இலை
வெயிலிலும் விவசாயிகள் வாழ்வில் 'மணம் வீசுது' கொத்தமல்லி இலை
வெயிலிலும் விவசாயிகள் வாழ்வில் 'மணம் வீசுது' கொத்தமல்லி இலை
ADDED : ஏப் 29, 2025 11:59 PM

தொண்டாமுத்தூர், ; தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், கோடை வெயிலிலும், கொத்தமல்லி இலைக்கு நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் சுமார், 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு, சின்னவெங்காயம், தக்காளி, மஞ்சள், தென்னை, வாழை உள்ளிட்டவை முக்கிய பயிராக பயிரிடப்படுகிறது.
அதோடு, குறுகிய கால பயிர்களான கொத்தமல்லி, கீரைகள், பூக்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்நிலையில், தற்போது, கொத்தமல்லி இலைக்கு, நல்ல விலை கிடைப் பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'கொத்தமல்லி இலை, 60 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடுகிறது. நீண்ட நாள் பயிர்களும் சரியான விலை கிடைக்காமல் உள்ளபோது, ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் பயிரிட்ட கொத்தமல்லி இலை, ஒரு கட்டு 15 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் லாபம் பெறுகிறோம். தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையிலும், கருகாமல் கொத்தமல்லி இலை எங்கள் வாழ்தாரத்துக்கு கைகொடுத்து வருகிறது' என்றனர்.

