/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க 28ம் ஆண்டு விழா
/
மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க 28ம் ஆண்டு விழா
மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க 28ம் ஆண்டு விழா
மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க 28ம் ஆண்டு விழா
ADDED : ஜன 09, 2024 01:07 AM
கோவை;கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின், 28ம் ஆண்டு விழா, 'கொடிசியா' அரங்கில் நடந்தது.
விழாவில், மாநகராட்சி பூங்காக்களில், 5,000 மரக்கன்றுகள் நடுதல், மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவச கண், பல் பரிசோதனை முகாம்கள் நடத்துவது, சங்க உறுப்பினர்களுக்கு இந்த ஆண்டு முதல், மருத்துவ காப்பீடு ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்குவது, அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் சமமான முறையில், வேலை கிடைக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க செயலாளர் சந்திர பிரகாஷ், தலைவர் உதயகுமார், பொருளாளர் அம்மாசையப்பன் உட்பட பலர் பங்கேற்றனர். நடிகர் சதிஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.