/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு ஓய்வறை கட்ட மாநகராட்சி முடிவு
/
108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு ஓய்வறை கட்ட மாநகராட்சி முடிவு
108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு ஓய்வறை கட்ட மாநகராட்சி முடிவு
108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு ஓய்வறை கட்ட மாநகராட்சி முடிவு
ADDED : ஜூலை 31, 2025 10:07 PM
கோவை; கோவையில், அவசரகால பணியாளர்களான, 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு மண்டலத்துக்கு ஒரு ஓய்வறை அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மழை, வெயில் என பாராமலும், கொரோனா போன்ற பேரிடர் சமயங்களிலும் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது, 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள், முதலுதவி செய்யும் மருத்துவர்கள் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகின்றனர்.
கடினமான சூழலில் பணிபுரியும் இவர்கள் ஓய்வு எடுக்க முடியாமலும், கழிப்பறை உள்ளிட்டஅடிப்படை வசதிகளின்றியும் சிரமப்படுகின்றனர்.
இப்பணியாளர்களுக்காக, குளியல் அறை, கழிப்பிடம் அடங்கியஓய்வறை அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அதன்படி, மண்டலத்துக்கு ஒன்று என ஐந்து ஓய்வறைகள் அமைப்பதற்கு, மேயரின் அத்யாவசிய குறைதீர்ப்பு முகாமிற்கான சிறப்பு நிதியில் இருந்து(ரூ.1 கோடி) ஒதுக்கீடு செய்து, நேற்று நடந்த மாமன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உணவு சப்ளையர்களுக்கு
இரண்டு இடம் ஒதுக்கீடு
சென்னையை போல் கோவை மாநகராட்சி பகுதியிலும் உணவு சப்ளையர்கள் ஓய்வெடுக்க சிறப்பு வசதி ஏற்படுத்தப்படும். முதல்கட்டமாக, அவிநாசி ரோடு மற்றும் ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் அவர்களுக்கு ஓய்வறை கட்ட ஆலோசிக்கப்பட்டுள்ளது. இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருவதாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.