/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இடையர்பாளையம் சந்திப்பை மேம்படுத்த மாநகராட்சி முடிவு
/
இடையர்பாளையம் சந்திப்பை மேம்படுத்த மாநகராட்சி முடிவு
இடையர்பாளையம் சந்திப்பை மேம்படுத்த மாநகராட்சி முடிவு
இடையர்பாளையம் சந்திப்பை மேம்படுத்த மாநகராட்சி முடிவு
ADDED : நவ 04, 2025 11:56 PM
கோவை: தடாகம் ரோட்டில் கவுண்டம்பாளையம் ரோடு - இடையர்பாளையம் சந்திப்பு மற்றும் குமாரசாமி குளக்கரை அருகே உள்ள இடத்தை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாநகர போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
இடையர்பாளையம் சந்திப்பில் தற்காலிகமாக மையத்தடுப்பு கற்கள் வைத்து, 'யூ டேர்ன்' வசதி செய்யப்பட்டிருக்கிறது. பெரிய வாகனங்கள் திரும்பும் போது, சிரமம் ஏற்படுகிறது. மற்ற வாகனங்கள் எளிதாக கடந்து செல்கின்றன. பரீட்சார்த்த முறையில் இன்னும் ஒரு மாதம் ஆய்வு செய்து விட்டு, அதன்பின், நிரந்தர கட்டமைப்பு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. முத்தண்ணன் குளக்கரை பகுதியில், ஒருபுறம் இட வசதி இருக்கிறது; மறுபுறம் குறுகலாக இருக்கிறது. குளக்கரை மேடாக உள்ளது.
நான்கு வழிகளில் இருந்து வாகனங்கள் வருவதால், விபத்து ஏற்படாத வகையில், 'யூ டேர்ன்' வசதி ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

