sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'மக்களைத் தேடி மாநகராட்சி' ; சிறப்பு முகாம் இன்று துவக்கம்

/

'மக்களைத் தேடி மாநகராட்சி' ; சிறப்பு முகாம் இன்று துவக்கம்

'மக்களைத் தேடி மாநகராட்சி' ; சிறப்பு முகாம் இன்று துவக்கம்

'மக்களைத் தேடி மாநகராட்சி' ; சிறப்பு முகாம் இன்று துவக்கம்


ADDED : செப் 25, 2024 10:27 PM

Google News

ADDED : செப் 25, 2024 10:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : 'மக்களைத் தேடி மாநகராட்சி' என்கிற சிறப்பு முகாம், கோவை, 53வது வார்டு மணி மஹாலில் இன்று (26ம் தேதி) காலை, 10:00 முதல் பிற்பகல், 2:00 மணி வரை நடக்கிறது.

கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை கலெக்டர் தலைமையில் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. இதேபோல், செவ்வாய்க்கிழமை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் முன்னிலையில் நடைபெறுகிறது. மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் எஸ்.பி., அலுவலகத்திலும் முகாம்கள் நடத்தப்படுகின்றன. இருப்பினும், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மக்கள் புகார் மனு அனுப்புகின்றனர்.

அதேநேரம், 'மக்களுடன் முதல்வர்', 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என பல்வேறு வடிவங்களில் புகார் மனுக்கள் பெற்றாலும், பொதுமக்கள் எதிர்பார்க்கும் தீர்வு கிடைப்பதில்லை. அதனால், அரசு துறை அலுவலகங்களுக்கு நடையாய் நடக்கின்றனர்; மீண்டும் மீண்டும் மனு கொடுக்கின்றனர். அரசு துறைகளில் இருந்து, 'உங்களது கோரிக்கை பரிசீலனையில் இருக்கிறது' என, பொத்தாம் பொதுவாக ரெடிமேடு பதிலளிப்பதால், பொதுமக்கள் அதிருப்தி அடைகின்றனர்.

இப்பிரச்னைக்கு தீர்வு காண, 'மக்களைத் தேடி மாநகராட்சி' என்கிற சிறப்பு திட்டம், கோவை மாநகராட்சியில் இன்று (26ம் தேதி) துவக்கப்படுகிறது. கிழக்கு மண்டலம், 53வது வார்டு, காமராஜர் ரோட்டில் மணி மஹாலில் காலை, 10:00 முதல் பிற்பகல், 2:00 மணி வரை இம்முகாம் நடைபெறும்.

சொத்து வரி மற்றும் காலியிட பெயர் மாற்றம், காலியிட வரி விதிப்பு, வரி குறித்த அனைத்து வித திருத்தங்கள், வரிப்புத்தகம் வினியோகம், புதிய கட்டடங்களுக்கு வரி விதிப்பு, குடியிருப்பு முறையில் இந்து வணிக முறைக்கு மற்றும் வணிக பயன்பாட்டில் இருந்து குடியிருப்பு முறைக்கு மாற்றம்.

புதிய குடிநீர் இணைப்பு மற்றும் குடிநீர் தொடர்பான புகார்கள், தெருவிளக்கு அமைத்தல், மழை நீர் வடிகால் துார்வாருதல், சாலை வசதி, பராமரிப்பு பணி, மாநகராட்சி பள்ளி பராமரிப்பு, பிறப்பு - இறப்பு சான்று கோருதல், திருத்தம் செய்தல், தொழில் உரிமம் கோருதல்.

டி.எஸ்.எல்.ஆர்., நகல் மற்றும் பெயர் மாற்றம், கட்டட அனுமதி விண்ணப்பம், மனை வரன்முறைப்படுத்துதல், சர்வே வரைபடம் கோருதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த முகாமில் பெறலாம்.

மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட, 20 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள், இம்முகாமில் பங்கேற்று, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் சமர்ப்பித்து, உரிய உத்தரவு பெறலாம்.

காலையில் மனு; மாலையில் பதில்

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''இனி, 15 நாட்களுக்கு ஒருமுறை மண்டலம் வாரியாக 'மக்களைத் தேடி மாநகராட்சி' சிறப்பு முகாம் நடத்தப்படும். அந்த மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து அதிகாரிகளும் ஒரே இடத்தில் இருந்து மக்களிடம் விண்ணப்பம் பெறுவர். உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தால், அன்றைய தினம் மாலையே உத்தரவு வழங்கப்படும்,'' என்றார்.








      Dinamalar
      Follow us