/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு மாநகராட்சி அதிகாரிகள் இட மாற்றம்

ADDED : நவ 01, 2025 05:23 AM
கோவை: 2026 சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தப் பணிகளை ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி, வரும் 4ம் தேதி துவங்க இருக்கிறது.
அதற்கு முன்னதாக, மாநகராட்சிகளில் காலியாக உள்ள உதவி வாக்காளர் பதிவு அலுவலர் பணியிடங்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, 10 உதவி கமிஷனர்களை பணி மாற்று அடிப்படையில் பணியிட மாற்றம் செய்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, மாநகராட்சி உதவி கமிஷனர் (நிர்வாகம்) மோகனசுந்தரி, ஈரோடு மாநகராட்சிக்கு (மண்டலம்-1) மாற்றப்பட்டுள்ளார். உதவி கமிஷனர் (வருவாய்) மகேஷ் கனகராஜ், மாநகராட்சி வடக்கு மண்டல உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து உதவி கமிஷனர் மோகனசுந்தரி உடனடியாக விடுவிக்கப்பட்டார். மாநகராட்சி மத்திய மண்டலத்தில் உதவி நகரமைப்பு அலுவலர் பணியிடம் காலியாக இருந்தது. இவ்விடத்துக்கு ஹேமலதா நியமிக்கப்பட்டுள்ளார்.
உதவி நிர்வாக பொறியாளராக, உதவி பொறியாளர் குமரேசனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
உதவி கமிஷனர் (வருவாய்), உதவி கமிஷனர் (நிர்வாகம்) ஆகிய பணியிடங்களுக்கு வேறு அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை.